head


மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்!

|Wed 14th Feb 2018 09.30AM|| Page Views : 45

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு கடந்த திங்கட்கிழமை காலை ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார்.

அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.

விஷத்தன்மை இருக்கலாம் என்று சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். கடிதம் வந்த போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக நியூயார்க் காவல் துறை அதிகாரிகள தெரிவிக்கையில்;,

நாங்கள் அந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் விஷத்தன்மை எதுவும் இல்லை என்றனர் மேலும் அவர்கள், ஜூனியர் டிரம்பின் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஜூனியர் டிரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் ரகசிய பாதுகப்பு சேவை அமைப்பினர், வெள்ளை பவுடர் குறித்து விசாரித்து வருவதாக கூறினர்.

இது குறித்து ட்வீட் செய்த ஜூனியர் டிரம்ப், அச்சத்திற்குரிய இந்த சம்பவத்திற்கு பிறகு வனிசாவும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

எதிர்ப்பை இப்படி தெரிவிப்பது வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.