head


அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல்!

|Wed 14th Feb 2018 09.44AM|| Page Views : 33

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்துள்ளததைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது நேற்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரை அதிபர் பதவியில் இருந்து திரும்ப அழைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ஜூமா என்ன பதில் தெரிவித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவரது அலுவலகமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

தற்போது 75 வயதாகும் ஜூமா அந்த முடிவுக்கு இணங்கவில்லையெனில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த 2009 முதல் பதவியில் உள்ள ஜூமா தனது பதவிக்காலத்தில் பெரும்பாலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.

அவரைப் பதவியில் இருந்து நீக்க தனது திட்டங்கள் என்னவென்பதை அக்கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

எனினும், அக்கட்சியினர் சிலர் இதை தென் ஆஃப்ரிக்க ஊடகங்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவற்றிடம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் கூட்டத்திலிருந்து வெளியேறி ஜூமாவைச் சந்திக்க சென்ற அக்கட்சியின் தலைவர் சிரில் ராமபோசா, ஜூமா பதவி விலகாவிட்டால் அவர் திரும்ப அழைக்கப்படுவார் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.