head


காஷ்மீரில் அமைதி திரும்ப பாகிஸ்தானுடன் பேசவேண்டும்

|Wednesday 14th February 2018 10:33 AM|| Page Views : 14

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமானால் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வீடுகள் சேதமடைவதுடன், உயிரிழப்புகளும் நடப்பதால் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் சூழல் உள்ளது.

இதுமட்டுமின்றி, தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

ஜம்முவில் உள்ள ராணுவ முகாமில் இருதினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ராணுவ முகாமில் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மாநில முதல்வர் மெகபூபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.