head


அர்ஜூனவின் காலஅவகாசம் நிறைவு

|Wednesday 14th February 2018 11:19 Am || Page Views : 59

சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

அவரை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன, கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் இதுவரையில் நாட்டுக்கு திரும்பவில்லை என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த வழக்கின் சந்தேகத்திற்குரியவர்களான பர்பெச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.