head


குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் ஆஸ்திரிய வீரர்

|Wed 14th Feb 2018 12.10PM|General| Page Views : 19

குளிர்கால ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான ஸ்னோபோர்டு ஹாஃப் பைப் பிரிவில் அமெரிக்காவின் சோலோ கிம் தங்கப் பதக்கம் வென்றார்.

தென்கொரியாவின் பியாங்சங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஸ்னோபோர்டு ஹாஃப் பைப் பிரிவில் 17 வயதான அமெரிக்காவின் சோலோ கிம் தங்கப் பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் சீனாவின் ஜியாயு வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ஏரியல் கோல்டு வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆடவருக்கான அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரியாவின் மார்செல் ஹிர்ஸெர் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சிஸ் பின்டுரால்ட், விக்டர் முபாத் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர். கர்லிங் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடா தங்கப் பதக்கமும், சுவிட்சர்லாந்து வெள்ளிப் பதக்கமும், ரஷ்யா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது.

மகளிருக்கான ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் இத்தாலியின் அரியானா ஃபோட்டானா தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் நெதர்லாந்தின் யரா வான் கேர்ஹோப் வெள்ளிப் பதக்கமும், கனடாவின் கிம் பவுட்டின் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.