head


மேம்பாலத்துக்கு அடியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஆடவர்

|Wednesday 14th February 2018 || Page Views : 17

கோலாலம்பூர் பெக்கலிலிங் பஸ் நிறுத்துமிடத்துக்கு அருகே, கிள்ளான் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 42 வயது ஆடவரின் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இச்சம்பவம் திங்கட்கிழமை இரவுமணி 10 அளவில் நடந்திருக்கிறது.

உறவினர் ஒருவர் மற்றும் இரண்டு நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஜாலான் துன் ரசாக் மேம்பாலத்திலிருந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஷாருடின் அப்துல்லா கூறினார்.

தமது உடலில் தீப்பரவியதை உணர்ந்த அந்நபர் கிள்ளான் ஆற்றில் குதித்தார். அவர் ஆற்று நீரில் புத்ரா உலக வாணிப மையம் வரையில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றோரத்தில் உறங்கிவிட்டார்.

அந்நபர் கோலாலம்பூரிலிருந்து மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் சேர்க்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்நபர் மீன் பிடிக்கும்போது முழு போதையில் இருந்ததாக தெரிகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.