head


யாழ்.மாநகரசபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தெரிவு

|Wednesday 14th February 2018 2:45 PM|General| Page Views : 47

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர், ஆட்சி அமைப்பதில் பல சிக்கல் நிலமைகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் இன்று (14) யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பாக மாநகர முதல்வராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும், துணை முதல்வராக து. ஈசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் ஏக மனதாக தீர்மானித்துள்ளதுடன், உயர்மட்டத்தின் தீர்;மானத்தினை ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 2 வாரங்களில் இருவரும் தமது பதவிகளை சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.