head


வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பப் பெண் குழந்தைகளுடன் மருத்துவமனையில் தஞ்சம்

|Wednesday 14th February 2018 || Page Views : 49

வாள்வெட்டுக்கு இலக்கான 35 வயதுடைய குடும்பப் பெண் தனது இரு குழந்தைகளுடன் மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி கிராம்புவிலைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண் தன்னை தனது கணவன் மோசமாகத் தாக்கியதுடன் வாளால் தலையில் தாக்கியதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்து தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உயிராபத்து ஏற்படாதிருக்க பாதுகாப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன்,தன்னை காலைவரை மிருகத்தனமாகத் தாக்கினார் எனவும் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கினார் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.