head


இந்திய உயர்ஸ்தானிகர் - ஜனாதிபதி சந்திப்பு!

|Sat 30th May 2020 09:20 AM|Political| Page Views: 2

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் இராஜதந்திர உறவுகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, கடந்த மே 14 ஆம் திகதி, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக, அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சந்திப்பின் பின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிந்து, இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான, இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை, ஜனாதிபதி, இந்திய உயர் ஸ்தானிகரிடம் மீண்டும் உறுதிப்படுத்தினார். கடந்த 23 ஆம் திகதி, இந்திய பிரதமருடன், தொலைபேசியூடாக மேற்கொண்ட சுமுகமான உரையாடலை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தற்போதைய கஷ்டமான சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில், இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை, ஜனாதிபதியிடம் தெரிவித்த உயர் ஸ்தானிகர், கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான, வெற்றிகரமான போராட்டத்திற்கு, ஜனாதிபதி வழங்கி வரும் சரியான தலைமைத்துவத்தை பாராட்டினார். இரு நாடுகளினதும் நலனுக்காக, தற்போது இணக்கம் காணப்பட்டுள்ள கூட்டுப்பங்காண்மை திட்டங்களை, நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதியும் இந்திய உயர் ஸ்தானிகரும் வலியுறுத்தியுள்ளனர்.

இரு தரப்பு உறவுகளை, மேலும் மேம்படுத்தும் துறைகளாக, மூன்றாம் நிலைக்கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் விவசாய உற்பத்திகள் குறிப்பிடப்பட்டன. தாம் தெரிவு செய்யும் துறைகளில், கல்வியை பெற்றுக் கொள்வதற்காக, இலங்;கை புலமைப்பரிசில் பெறுனர்களுக்கு, மேலும் வாய்ப்புகளை வழங்க, இந்தியா தயாராகவுள்ளதாக, உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்கு மேலதிகமாக, இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உருவாகியுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு, பிராந்திய நாடுகளுக்கு இடையே, பரஸ்பரம் பயனுறுதி வாய்ந்த ஒத்துழைப்பை, மேலும் பலப்படுத்த வேண்டும் என, ஜனாதிபதியும் இந்திய உயர் ஸ்தானிகரும் உடன்பட்டனர். இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவும் பங்கேற்றார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.