head


ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் மசூதிகள்!

|Sat 30th May 2020 11:20 AM|General| Page Views: 2

சவுதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் மசூதிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 90,000 மசூதிகள் வரை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் மெக்காவில் உள்ள மசூதிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சவுதி ஊடகங்கள் தாப்பில், மசூதியில் தொழுகையில் ஈடுபடுபவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து பல்வேறு மொழிகளில் ஊடகங்கள் விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மசூதிகளில் நுழைவதற்கு முன்னர் கிருமி நாசினியை கொண்டு கை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக சவுதியில் பணி புரியும் வெளிநாட்டினர்களுக்கான விசா காலக்கெடு சென்ற மாதம் நீட்டிக்கப்பட்டது. பிப்ரவரி 25 முதல் மே 24 வரையிலான காலகட்டத்தில் காலாவதியாகும் பணி சூழல் காரணமாக சவூதியில் வசித்து வருபவர்களுக்கான விசாக்களுக்கு சென்ற மாதம் கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் இது வரையில் 80,185 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 54,553 பேர் குணமாகியுள்ளனர். 441 பேர் பலியாகியுள்ளனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.