head


89 செயலிகளை நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு!

|Thu 09th Jul 2020 09:55 AM|| Page Views: 18

89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.