head


லிபியாவில் நிலைமை மோசமடைவதாக ஐ.நா. பொதுச் செயலர் எச்சரிக்கை.!

|Fri 10th Jul 2020 09:35 AM|General| Page Views: 3

லிபியாவில் மோதல் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதுடன், அங்கு வெளிநாடுகளின் தலையீடுகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் ஐ.நா. பாதுகாப்புச் சபையை எச்சரித்தார், 2011 ஆம் ஆண்டில் நேட்டோ ஆதரவுடன் முயம்மர் கடாபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் லிபியாவில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.

2014 முதல் லிபியா பிளவுபட்டுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் தலைநகரம் திரிபோலி மற்றும் வடமேற்கைக் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தார் பெங்காசி கிழக்குப் பகுதிகளை ஆட்சி செய்து வருகிறார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் அரசாங்கத்துக்கு துருக்கி ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.