head


மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த கோரிக்கை!

|Tuesday, 29th September 2020|Political| Page Views: 39

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அரசியல்வாதிகளும் மனிதர்கள் என்று நானே கூறுகிறேன். இலங்கையில் வேறு எவரும் இதனைக் கூறி கேட்டதில்லை. அரசியல்வாதிகளும் எமது சமூகத்தில் ஒரு அங்கம். நாம் சமூகத்தைக் கறுப்பாக வைத்துக்கொண்டு, தங்கத்தால் செய்த, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட, பாலில் நீராட்டிய அரசியல்வாதிகளைத் தேட முடியாது. எமக்கு ஜனநாயக சமூகம் அவசியம் என்றால், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியது போல், ஜனநாயகத்தின் ஊடாக எதனையும் செய்யக் கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.

அப்படியான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஜனநாயகம் என்பது மற்றவர்களை மதிப்பது, அவர்களின் கருத்துக்கு இடமளிப்பது. இதனைத் தவிர வேறு எதுவுமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமாயின் கருத்துக்களைப் பெற வேண்டும் என நான்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது குறித்து மகிழ்ச்சி.

78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் படும்போது மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. தற்போது, நான் 20ஆவது குறித்தோ 19ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ பேச போவதில்லை. நான் தற்போது ஆணைக்குழுவில் இருக்கின்றேன். சிறந்த அரசியலமைப்புச் சட்டம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.