head


அக்டோபர் 15-ம் தேதிக்கு பின் சுற்றுலா தலங்கள் திறப்பு!

|Tuesday, 29th September 2020|| Page Views: 40

கேரளாவில் அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார்.

கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மத்திய அரசின் படிப்படியான தளர்வுகள் வழிகாட்டுதல்படி கேரளாவில் தனியார் ஓட்டல்களும், ரிசார்டுகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட உள்ளதாக கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:- கேரளாவில் அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. முதலில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பிரசாரங்கள் நடத்தப்படும் என்றார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.