head


பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பு!

|Wednesday, 30th September 2020|Education| Page Views: 36

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்தகைய மாணவர்களை பாடசாலை கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்லவேண்டிய வயதில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்போது கண்டறியப்படும் மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் தொடர்பிலான விசேட விசாரணைகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகளே அதிகளவில் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.