head


வடகொரியாவை விமர்சித்த ஐ.நா.!

|Wednesday, 30th September 2020|Political| Page Views: 32

வடகொரியா தனது அணுசக்தி சோதனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், வடகொரியாவில் தனக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து மீறுகிறது. பெட்ரோலை இறக்குமதி செய்கிறது. தனது தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 2017 ஆம் ஆண்டில் 22 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

இதனைத் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனை தொடர்பான உடன்படிக்கைகளை மீறுவதாக வடகொரியா மீது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை 2017 ஆம் ஆண்டில் பொருளாதாரத் தடை விதித்தது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கிறது.

அமெரிக்காவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இதற்கிடையில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.