head


பெண்களைக் காக்கத் தவறிய உலக நாடுகள்!

|Wednesday, 30th September 2020|General| Page Views: 29

கரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களிலிருந்து பெண்களைக் காக்க உலக நாடுகள் தவறி விட்டதாக ஐக்கியநாடுகள் அவை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். கரோனா அவசரநிலையால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளனர். இந்நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அவை திங்கள்கிழமை தெரிவித்தது. ஒப்பீட்டளவில் உலகில் எட்டு நாடுகளில் ஒன்று மட்டுமே பெண்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

நெருக்கடி காலம் ஒரு நல்ல எதிர்காலத்திற்காக சமூகங்களை மறுவடிவமைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் பல நாடுகள் பெண்கள் மற்றும் சிறுமிகளை தொற்றுநோய்களுடன் பிணைக்கப்பட்ட அபாயங்களிலிருந்து பாதுகாக்கத் தவறிவிட்டன என்று ஐநா பெண்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுநோய் பெண்களை கடுமையாக தாக்குகிறது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டப் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஊதியம் பெறாத பராமரிப்பாளர்களாகவும், சமூகப் பாதுகாப்பு இல்லாத வேலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்" என்று ஐநா மகளிர் நிர்வாக இயக்குநர் பம்ஸைல் மலாம்போ-என்குகா கூறினார்.

206 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, ஐரோப்பாவில், 93வீத நாடுகள் குறைந்தது ஒரு நடவடிக்கையாவது எடுத்துள்ளன. ஆப்பிரிக்காவில் 63வீத நாடுகள் குறைந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் உலக அளவில் 2021ஆம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என ஐக்கியநாடுகள் அவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.