head


சிரியாவில்; 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு!

|Wednesday, 30th September 2020|General| Page Views: 32

சிரியாவில் கொரோனா ஊரடங்கு பாதிப்புகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மேலும் 7 லட்சம் குழந்தைகள் வரை உணவு இல்லாமல் தவிப்பதாக சேவ் தி சில்ரன் என்னும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிரியாவில் கொரோனா நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. கொரோனா தொற்றால் அந்நாட்டில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் தவிப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ( சேவ் தி சில்ரன்) நேற்று (செப்.,29) தெரிவித்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பு கூறுகையில், கொரோனா ஊரடங்கால் மக்களின் பொருளாதாரத்துடன், குழந்தைகள் உட்பட எண்ணற்றவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதத்தில் நாட்டில் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சமாக உயர்ந்துள்ளது.

சிரியாவின் பொருளாதாரத்திற்கு போர், ஊழல் மற்றும் பொருளாதார தடைகள், அண்டைநாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி ஆகிய பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் கடந்த 10 ஆண்டுகளில், 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பும், பல குழந்தைகள் உணவு வாங்ககூட பணம் இல்லாமல் தவித்தனர். போரினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளில், கொரோனா தொற்றும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கி உள்ளது.

வடகிழக்கு சிரியாவில் கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகளுக்கு 9 மாதங்களாக பழவகைகள் கூட கிடைக்கவில்லை. சிரியா நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கியமான ஒன்றாகும். அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாடால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக்குறைவை எதிர்கொள்கின்றனர். இதுவரை சிரியாவில் 4100 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி கொண்டவர்களுக்கு அரசு நாளொன்றுக்கு 300 சோதனைகளை இலவசமாக செய்கிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து உள்ள உணவுகளை சேவ் தி சில்ரன் அமைப்பு வழங்கும். மேலும் பசியால் வாடும் குழந்தைகளை காப்பாற்ற எல்லை கடந்து உதவிக்கரம் நீட்டுமாறு அனைத்து தரப்பினரிடமும் இந்த அமைப்பு கோருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.