head


மாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா!

|Wednesday, 30th September 2020|| Page Views: 28

மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படைக்கு, இந்தியா ஒரு டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தென் மேற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. 90 ஆயிரம் கி.மீ பரப்பளவில் சிறியது பெரியதுமாக 1200 தீவுகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு டோர்னியர் விமானத்தை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் கீழ் இவ்விமானம் இயங்கும். அதன் இயக்க செலவுகளை இந்தியா ஏற்கும். 2016-ம் ஆண்டு அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவிற்கு வருகை டோர்னியர் விமானத்தை அளித்து உதவும் படி கோரினார்.

2017-ம் முதல் இவ்விமானத்தை இயக்க, அந்நாட்டு விமானிகள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது விமானம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிராந்திய கடல்களில் சீன கப்பல்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம். பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல், முறைப்படுத்தப்படாத மீன்பிடித்தல் போன்றவற்றையும் கண்காணிக்க முடியும் என்கின்றனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.