head


குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது: பிரதமர் மோடி!

|2022-11-23 15:18:01|| Page Views: 134

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி, குஜராத்தின் மெஹ்சானா நகரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, மெஹ்சானாவில் மக்களின் அன்பு நிறைந்த வரவேற்பை பார்த்து செயலற்று போயுள்ளேன். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற தயாராகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் பெருமளவு மாறியுள்ளது. குஜராத் மாநிலம் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனை அவர்கள் பார்த்தது இல்லை.

அவர்களின் முந்தின தலைமுறை இன்று காணப்படும் குஜராத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர் என்று பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்து விட்டது. காங்கிரசானது, குடும்ப அரசியல், சாதிய அடிப்படையிலான, மதவெறி சார்ந்த மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியல் நடத்தும் மாதிரியை கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.