head


கனடா அனுப்புவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி!

|2022-11-24 09:52:18|Crime| Page Views: 129

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும், 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் தங்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது, கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும், தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களிடம் தெரிவிக்கின்றார் எனவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். தாங்கள் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும், மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.