head


அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஸ்வெரவ் தோல்வி- ப்ளிஸ்கோவா வெற்றி!

|2023-01-20 11:34:34|General| Page Views: 159

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் தோல்வியடைந்ததோடு, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், அமெரிக்காவின் மைக்கேல் ம்மோஹ்வை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், அமெரிக்காவின் மைக்கேல் ம்மோஹ், 6-7, 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா, கஸகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவுடன் மோதினார்.

இப்போட்டியில், செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா, 6-0, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.