head


போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அதிக அளவில் உதவிகள் வழங்கப்படும்!

|2023-01-25 11:43:52|Political| Page Views: 112

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அதிக அளவில் உதவிகள் வழங்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனா ஜாலி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை நிலை நாட்ட வேண்டுமாயின் கனடா உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்புவது தொடர்பில் ஜெர்மன் வெளிவிவகார அமைச்சருடன் கனடிய அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உக்ரைனின் ராணுவ தேவைகள் தொடர்பில் அந்நாட்டு தலைமைத்துவத்துடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.