ஐஎன்எஸ் வகிர்’ நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைந்தது!
|2023-01-25 12:33:03|Defence|
Page Views: 47
பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, ‘ஐஎன்எஸ் வகிர்’ என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் திங்கட்கிழமை கடற்படையில் இணைந்துள்ளது.
இருதரப்பு தயாரிப்பின் ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.
ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும்.
கடந்த 2005ஆம் ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007ஆம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.
முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019இல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021ஆம் ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5ஆவது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வகிர் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.