head


முதல் முறையாக இளைஞர், யுவதிகளுக்காக ஜனாதிபதி ரணிலின் திட்டம்!

|2023-01-25 14:34:18|Political| Page Views: 111

தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

75ஆவது சுதந்திர தினத்துக்கு இணைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முதற்தடவையாக இலங்கையின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட நகரமொன்று இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தூய்மைப்படுத்தப்படும்.

இதற்கமைய பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் 335 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 50 000 இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட நகரத்தை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.