head


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி; தொண்டமானுக்கு அஞ்சலி!

|Sat 30th May 2020 09:10 AM|General| Page Views: 3

அமரத்துவம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தின் ஏற்பாட்டில் அமரத்துவம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்களினால் அமரத்துவம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு ஒன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.