head


மலையக சமுகத்தின் மீது தவறானப் பார்வையை ஏற்படுத்தும் சிறுமிகளின் செயல் !

|2024-04-14 12:31:55|General| Page Views: 144

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதிலிருந்து இலங்கை சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த நாடாக விளங்குகின்றது என்பது தெளிவு.

இவ்வாறு இருக்கும்போது அண்மையில் சுற்றுலா பயணி ஒருவர் எமது மலையக பிரதேசத்திற்கு விஜயம் செய்த காணொளியொன்றை பதிவிட்டிருந்தார். உண்மையில் அந்த காணொளியைப் பார்த்தப்போது சற்று வெட்கித் தலை குனிய வேண்டியிருந்தது. ஏனெனில் அக்காணொளியில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த எமது மலையக சிறுமிகள் மூவர் பிஸ்கட் ,சொக்லேட் மற்றும் பணம் கேட்டு நச்சரிக்கின்றார்கள்.

அப்போது அந்த சுற்றுலாப் பயணி நான் கடையில் பிஸ்கட் வாங்கித் தருகிறேன் என கூறுகிறார். ஆனால் அச்சிறுமிகள் மீண்டும் மீண்டும் அப்பிரயாணியிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர். எனவே தன்னை சுதாகரித்துக்கொண்ட அவ்வெளிநாட்டு பிரயாணி முகச்சுளிவுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

இக்காணொளியைப் பார்த்தப்போது எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது.ஏனெனில் நாட்டின் சுற்றுலாத் துறையில் எமது மலையகம் சிறப்பு இடத்தைப்பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னர் எமது மலையக பிரதேசம் நோக்கி சுற்றுலா பயணிகள் வர விரும்புவார்களா ? இதனைப் பார்த்தால் ஏனைய சமூகத்தினர் எம்மை இழிவாக நினைக்க மாட்டார்களா ? இது எமது சமூகத்தின் மீது தவறானப் பார்வையை ஏற்படுத்திவிடாதா ?

சிறுவர்களை தவறாக சொல்லவில்லை.இனி இதுப்போன்ற தவறுகள் இனி ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்ற அக்கறையிலேயே இப்பதிவினை சம்ர்ப்பிக்கின்றேன் .



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.