head


தாயகத்தின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாகும் எமது தமிழ் அரசியல்வாதிகள் ?

|2024-04-17 14:25:45|General| Page Views: 538

எமது தாயகம் நோக்கி வரும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றமைக்கான காரணங்கள் என்ன? பின்னணி என்ன?

அண்மையில் இந்தியாவின் அதானி குழுமத்தின் ஏற்பாட்டில் தாயகத்தின் பல்வேறு பிரதேசங்களில் காற்றாலை மின்சார செயற்திட்டம் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன.ஆனால் திடீரென அவ்வேளை திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன.

உண்மையில் எடுத்துக் கொண்டால் , தாயகத்தின் பல்வேறு பிரதேசங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மின்சாரவசதி இல்லாமையால் அது தொடர்பான தொழிற்சாலைகள், கைத்தொழில்கள் மற்றும் அபிவிருத்திகள் போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது அப்பிரதேசங்கள் தொடர்ந்தும் பின்தங்கிய பிரதேசங்களாகவே இருந்துவருகின்றன.

அதேபோல தாயக குடிநீர் பிரச்சினைக்காக கடல்நீர் சுத்திகரிப்பு செயற்திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் அதற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையால் அத்திட்டமும் கைவிடப்பட்டது.

கிழக்கில் இருந்து வடக்கிற்கு நீர் கொடுப்பதிலும் பிரச்சினை அதற்கு எதிராகவும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.தாயகம் நோக்கி வருகின்ற அனைத்து அபிவிருத்தி செயற்கிட்டங்களுக்கும் எமது அரசியல்வாதிகள் முட்டுக்கட்டாக இருக்கின்றபோது எவ்வாறு தாயகம் அபிவிருத்தி அடையும்.

அரண்மனை போன்ற சொகுசு வீடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் எமது தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மின்சார மற்ற குடிநீர் அற்ற வாழ்க்கை முறையின் கொடுமைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆராய்ந்ததில் தெரியவருவது இச்செயற்திட்டங்களுக்கு உண்மையில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவர்களுக்கு நன்மை செய்வதாக தங்களைக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளின் சூழ்ச்சியே இது.

எப்பொழுதும் மக்கள் பிரச்சினையிலும் அல்லது ஏதாவதொரு தேவையை எதிர்ப்பார்த்தும் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் இவர்களின் அரசியல் வண்டி ஓடும். இத்தகையவர்களை அடுத்துவரும் தேர்தலில் மக்கள் புறக்கணித்து உரிய பாடம் கற்பிக்கவேண்டும்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.