head
Join Us


கச்சத்தீவு ஒப்பந்தத்தின் உட்பிரிவுகள்கூட அறிந்திராத தமிழ் தலைமைகள் ?????????

|2024-07-01 14:43:22|General| Page Views: 355

கச்சத்தீவு விவகாரம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.மீனவப்பிரச்சினை எழும்போதெல்லாம் கச்சத்தீவுப் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அறிந்ததே.

1974 ஆம் ஆண்டில் கச்சத்தீவு விடயத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திப்பட்டது.அதன் மூலமாக கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியா மீண்டும் கச்சத்தீவினை மீட்பதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.

இது தொடர்பாக எமது தமிழ் அரசியல் தலைமைகளிடம் வினவியபோது அவர்கள் அவ்வொப்பந்தம் பற்றி சரியான தெளிவின்றி இருப்பது கால கூத்தாகும். சி வி விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட ஒரு சிலரும் ஒப்பந்தம் பற்றி தெளிவின்மையோடு" தங்களுக்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது அறிந்திருந்தாலும் அதன் உட்பிரிவுகள் பற்றியோ அதனுள் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றியோ விரிவாக எதுவும்தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்..

கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசித் தீர்க்கப்பட்ட பிரச்சினை என்று கூறி வந்தவர்கள் . இப்போது எங்களுக்கு சரியாக எதுவும் தெரியாது என்று நாடகமாடுவது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்..தாயகத்தின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய கச்சத்தீவு பற்றி ஆழமாக அறிந்திருக்கவில்லையெனில் அது தொடர்பாக எவ்வாறு இந்திய பிரதிநிதிகளிடம் இவர்கள் கலந்துரையாடியிருப்பார்கள் ????

எமது ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று காட்டிக்கொள்ளும் இவர்கள் இவ்வாறு கூறுவது ஏன் ? எதற்காக? எம்மக்கள் சார்ந்த விடயத்தில் இவர்களுக்கான அக்கறை இவ்வளவுதானா ? இந்தியாவிடம் எதனை எதிர்ப்பார்த்து இவ்வாறு அலட்சியமாக பதில் அளிக்க முடிகின்றது.? எமது மீனவ சொந்தங்ளின் கண்ணீரின் வலிகூட விளங்கவில்லையா ? இத்தகைய கள்வர்களிடம்தான் எமது தாயகம் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

பதவிக்காக வாக்குகளுக்காக தந்திர நரிகளாக செயற்படும் இந்த கொடியவர்கள் வாய்ப்பு அமைந்தால் இவர்களே கச்சத்தீவினை இந்தியாவிற்கு தாரைவார்த்துவிடுவார்கள். ஆனால் ஏனைய விடயங்களில் ஓநாய்களாக ஓலமிடும் இவர்கள் கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சினையில் இதுவரை அணுவை கூட நகர்த்தவில்லை என்பது கண்கூடாக நாம் பார்த்துவருகின்றோம். எனவே இவர்களை நம்பி எமது தாயகம் இன்னும் எத்தனை காலத்திற்கு சீரழிய போகின்றதோ ????????



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.