head
Join Us


சந்தேகநபரின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வழங்கியமை குறித்து விசாரணை!

|2024-07-11 08:49:18|Crime| Page Views: 73

பிரபல வர்த்தகர் கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

பச்சைக்குத்தும் கடையின் உரிமையாளர் துலானிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களை அழைத்து சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எந்தவொரு உரிமையும் எவருக்கும் கிடையாது என துலனின் சட்டத்தரணி கருத்து வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட துலானிடம் ஏற்கனவே வாக்க மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னணியில் மீண்டும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு விசாரணைகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

சந்தேகநபரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை நடத்தப்படுவதினை நேரலையாக பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்க எவ்வித சட்ட ஏற்பாடுகளும் கிடையாது எனவும், விசாரணைகளில் ஊடகங்கள் தலையீடு செய்வதற்கு அனுமதியில்லை எனவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் முறைப்பாட்டாளர் போன்றே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் நியாயமான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சிலரது அறிவுறுத்தலுக்கு அமைய கிளப் வசந்தவை கடை திறப்பு விழாவிற்கு தாம் அழைத்ததாகவும் அதற்காக பணம் பெற்றுக்கொண்டதாகவும் துலான் கூறியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

துலான் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.