head
Join Us


அரசாங்க வைத்தியசாலைகளில் படைவீரர்களுக்கு முன்னுரிமை !

|2024-07-11 09:02:04|General| Page Views: 80

அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சேவையை பெற்றுக்கொள்ளும் போது படை வீரர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோருக்கு முன்னுரிமை வழங்கும் முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் முயற்சியின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரணவின் தலையீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களில் தங்கி வாழ்வோர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் நன்மை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் படை வீரர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தி அதற்கு உரிய தீர்வு திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் விருசர சிறப்புரிமை அட்டை எனும் ஓர் அட்டை முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதுகாப்பு படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோர் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நலன்புரி திட்டம் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு இந்த அட்டையை பயன்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இந்த நலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த படை வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த நலன்புரி திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.