head
Join Us


பொருளாதார உச்சி மாநாட்டு சுவிட்சர்லாந்தில் ஆரம்பம் !

|2024-06-07 10:34:53|General| Page Views: 211

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

The Rise Switzerland குழுவின் ஏற்பாட்டில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland - Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மகாநாட்டில் கலந்து கொள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான்(Senthil Thondaman) தனதுபாரியார் சகிதம் இன்று சூரிச் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அவரை The Rise Switzerland குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் மகாநாட்டில் கலந்துகொள்ள இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்துள்ளார்.

இதன்படி Davos மண்டபத்தில் இன்று தொடக்கம் 9ஆம் திகதிவரை உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறவுள்ளது.

உலகின் 32ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 500ற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், தொழில் லல்லுனர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகலாவிய The RISE நிறுவனத்தின் சுவிஸ்நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மசடோனியா நாட்டின் ஜனாதிபதி, அல்பானிய பிரதமர், கொசோவோ நாட்டின் பிரதமர் உட்பட தமிழக அரசின் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.