Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

மகிந்த–கோட்டாபய–பசிலுக்கு அரசியல் நெருக்கடி? நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதிய கருத்து

10 Aug 2026, 10:04 AM
பார்வைகள்: 227
மகிந்த–கோட்டாபய–பசிலுக்கு அரசியல் நெருக்கடி? நீதிமன்ற தீர்ப்பு குறித்து புதிய கருத்து

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அவர்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ‘ஊடறுப்பு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் உயர் அரசியல் அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் தீவிரமடையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இத்தகைய உயர்மட்ட அரசியல்வாதிகளை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அவர்களை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வீட்டுக்காவல் தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் ரீதியான நோக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், அவர்களின் எதிர்கால அரசியல் பயணம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் லங்காசிறியின் ‘ஊடறுப்பு’ நிகழ்ச்சியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.