Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

கொழும்பில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு

16 Aug 2026, 09:58 AM
பார்வைகள்: 523
கொழும்பில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்  சனிக்கிழமை (15) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

இதன்போது இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.