Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை நீக்க மறுப்பு-திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!

08 Sep 2026, 11:38 AM
பார்வைகள்: 680
முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை நீக்க மறுப்பு-திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

எனினும், முதலமைச்சர் விஜய் அவையில் தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும் திமுக உறுப்பினர் ஏ.வா. வேலு குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உத்தரவிட்டார்.