Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வெற்றி பெறுவார் – அர்ச்சுனா

13 Sep 2026, 11:35 AM
பார்வைகள்: 582
2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வெற்றி பெறுவார் – அர்ச்சுனா

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனக்கு “கருநாக்கு” இருப்பதாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா, தான் இதற்கு முன்னர் வெளியிட்ட பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தான் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதைத் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கும், வடக்கு மற்றும் தெற்கை இணைப்பதற்குமான தலைவராக நாமல் ராஜபக்ஷ செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்ஷவுக்கு தேவையான அரசியல் ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப் போவதில்லை எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுக்கும் நோக்கில் தனக்கு எதிராக 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டியதுடன், அரசாங்கத்தின் ஆட்சி முறை மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.