ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

user 16-Feb-2026 இலங்கை 52 Views

2026 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் நாளைய (17) தினம் நிகழவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 3.26 மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. 

தொடா்ந்து இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது. 

இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இலங்கையில் தெரியாது. 

ஆனால், அண்டாா்டிகாவின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலிருந்து மட்டுமே காணமுடியும். 

அண்டாா்டிகா கண்டத்தில் கான்காா்டியா மற்றும் மிா்னி போன்ற இடங்களிலும், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் பகுதியளவும், தென் அமெரிக்காவின் அா்ஜென்டினா மற்றும் சிலியின் சில பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும். 

எனினும் நாஸா தளம், யூ-டியூப் சேனல் மற்றும் இணையதளங்களில் இந்த நிகழ்வை காணலாம்.

சூரிய கிரகணத்தை நாம் வெற்றுக் கண்ணால் காணக்கூடாது. 

சூரிய ஒளியை ஊடுருவக்கூடிய கண்ணாடிகளை நாம் பயன்படுத்தி பாா்க்கலாம். 

சூரிய கிரகணம் பாா்ப்பவா்களாக இருந்தால் குறைவான நொடிகள் மட்டுமே பாா்க்க வேண்டும். 

இல்லாவிட்டால் கண்களில் பாதிப்பு உண்டாகலாம்.

மேலும் கிரகணத்தின்போது நிகழும்போது வெளியில் செல்லும்போது தவிா்க்க வேண்டும். 

இந்த ஆண்டின் மற்றொரு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிகழவுள்ளது. 

 

இது ஒரு முழு சூரிய கிரகணம் ஆகும். இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது

Related Post

பிரபலமான செய்தி