Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

உலகளாவிய வசூலில் சாதனை படைக்கும் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’

20 Oct 2026, 09:35 AM
பார்வைகள்: 631
உலகளாவிய வசூலில் சாதனை படைக்கும் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய ரீதியில் வசூல் சாதனைகளைப் படைத்து வருகின்றது.

ரென்ட்ராக் (Rentrak) அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலான வார இறுதியில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெயிலர் 2’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

குறித்த மூன்று நாட்களில் இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் 31.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளது.

இதற்கிடையில், பாரமவுண்ட் (Paramount) நிறுவனத்தின் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் 51.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியான ‘ஜெயிலர் 2’, இந்தியாவில் தனது நான்கு நாள் நீட்டிக்கப்பட்ட வார இறுதியில் சுமார் 224 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழ் திரையுலக வரலாற்றில் வெளியான முதல் நான்கு நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தைப் ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்தின் முந்தைய திரைப்படமான ‘கூலி’ ஈட்டிய 224.25 கோடி இந்திய ரூபா வசூலுக்கு நிகரான வசூலைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.