Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்!

10 Nov 2026, 10:06 AM
பார்வைகள்: 17
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்!

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்​சாக் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த அக்​டோபர் 27-ம் திகதி இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தமுள்ள 120 தொகுதி​களில் ஆட்​சி​யமைக்க 61 இடங்​களைக் கைப்​பற்ற வேண்​டும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்​த​மாக ஆளும் லிகுட் கூட்​ட​ணிக்கு 53 இடங்​கள் கிடைத்​தன. ஒட்​டுமொத்​த​மாக டுகெதர் கூட்​ட​ணிக்கு 48 இடங்​கள் கிடைத்​தன. இஸ்ரேலை சேர்ந்த அரபு கட்​சிகளின் கூட்​ட​ணி​யான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்​களை​யும் மற்​றொரு அரபு கூட்​ட​ணி​யான ராஆம் 8 இடங்​களை​யும் கைப்​பற்​றின.

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்​சாக் நேற்று முன்​தினம் அதி​காரப்​பூர்​வ​மாக அழைப்பு விடுத்​தார். அடுத்த 6 வாரங்​களுக்​குள் ஆட்சி அமைத்து பெரும்​பான்​மையை நிரூபிக்கவும் அறி​வுறுத்தி உள்​ளார்.

இந்த சூழலில் காடி ஐசன்​கோட் கூறிய​தாவது: நாம் இப்​போது அவசரகால சூழலில் உள்​ளோம். இதை புரிந்து கொண்டு எங்​களது கூட்​டணி அரசில் லிகுட் கட்சி மற்​றும் ஆளும் கூட்​டணி கட்​சிகள் இணை​ய​ அழைப்பு விடுக்​கிறேன். நாம் ஒன்​றிணைந்து தேசிய எமர்​ஜென்சி அரசை அமைக்​கலாம். ஆனால் என்னை பிரதம​ராக ஏற்​றுக் கொள்​ளும் கட்​சிகள் மட்​டுமே கூட்​ட​ணி​யில் இணைக்​கப்​படும்.