“Miss Teen Tourism” போட்டியில் இலங்கைப் பெண்

user 30-Jul-2025 விளையாட்டு 246 Views

இலங்கையில் நடைபெற்ற “Miss Teen Tourism” போட்டியில் முதலிடம் வென்ற அஞ்சனா ஹீனடிகல, பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள “Miss Teen Tourism” போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று (30) அதிகாலை பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டுள்ளார்.

அஞ்சனா ஹீனடிகல கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எயார் ஏசியா விமானம் AK-046 ஊடாக தாய்லாந்துக்கு சென்று பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள “Miss Teen Tourism” போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 40 நாடுகளில் இருந்து பல போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி