சிலாபம், பங்கதெனியா பகுதியில் ஒரே வீட்டுக்குள் மூன்று பெண்களுடன் கைதான கும்பல்

user 30-Jul-2025 இலங்கை 114 Views

சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில், கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) மாலை இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அப்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் அந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அவர் முச்சக்கர வண்டியில் சிலாபம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவர்.

சிலாபம் தலைமையகப் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி