Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்; 754 பேர் உயிரிழப்பு

16 Jul 2026, 02:24 PM
பார்வைகள்: 254
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்; 754 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் வேகமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 2,011 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 754 பேர் உயிரிழந்துள்ளனர்.இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. எபோலா பரவலைத் தொடர்ந்து பல நாடுகள் காங்கோவுடனான விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.இதற்கிடையில், பணிச்சுமை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கோ மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை, எபோலா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.