Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஈராக் அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர் உயிரிழப்பு

20 Jul 2026, 11:52 AM
பார்வைகள்: 290
ஈராக் அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர் உயிரிழப்பு

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில், ஈரானிய ட்ரோனின் வெடிபொருளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட வெடிப்பில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மற்றொரு வீரர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இடம்பெற்றுள்ளது. சமீப காலமாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.