Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

தங்கத்தின் விலையில் திடீர் தலைகீழ் மாற்றம்

12 Jun 2026, 03:19 PM
பார்வைகள்: 4,471
தங்கத்தின் விலையில் திடீர் தலைகீழ் மாற்றம்

நேற்றைய தினம் வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலை இன்று (12.06.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று ரூ.370,000 ஆக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கப் பவுணின் விலை இன்று ரூ.10,000 அதிகரித்து ரூ.380,000 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை, நேற்று ரூ.340,400 ஆக இருந்த 22 கரட் தங்கப் பவுணின் விலை இன்று ரூ.9,200 அதிகரித்து ரூ.349,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய விலையின்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் தங்க விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன