Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது

26 Jul 2026, 10:17 AM
பார்வைகள்: 1,626
இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது

இலங்கைக்கு இந்தியா இதுவரை வழங்கிய மொத்த உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்தியாவின் உதவிகள் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' (Vision MAHASAGAR) திட்டத்தின் முக்கிய பங்காளியாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் அண்மைய இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட சவாலான காலங்களில் இலங்கைக்கு முதலில் உதவிக்கரம் நீட்டிய நாடாக இந்தியா இருந்ததாகவும், அந்நாட்டு உதவிகள் துரிதமாகவும் நிபந்தனையற்றதாகவும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளிலும் இலங்கை - இந்திய உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.