Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

27 Jul 2026, 09:38 AM
பார்வைகள்: 222
இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

இந்திய மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதையடுத்து, கல்வி அமைச்சின் பொறுப்பு பிரல்ஹாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து எழுந்த மாணவர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளின் பின்னணியில் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு முன்னர் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் வகித்து வரும் அமைச்சுப் பொறுப்புகளுடன் கல்வி அமைச்சின் பொறுப்பையும் கவனிக்கவுள்ளார்.

தேர்வு முறைகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது, தேர்வு முகமைகளின் செயல்பாடுகளை சீரமைப்பது மற்றும் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது ஆகியவை புதிய கல்வி அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன.