Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

கனடாவில் 1.7 டன் போதைப்பொருள் பறிமுதல்: இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது

28 Jul 2026, 10:17 AM
பார்வைகள்: 196
கனடாவில் 1.7 டன் போதைப்பொருள் பறிமுதல்: இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தலைமறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா–கனடா எல்லை வழியாக லாரிகள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பல மாதங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் சுமார் 1.7 டன் எடையுள்ள கோகைன், மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு பல கோடி கனடிய டாலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.