Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

01 Aug 2026, 06:43 PM
பார்வைகள்: 125
உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தீவிர தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அண்மைக் காலமாக இரு தரப்பினரும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.