Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு

02 Aug 2026, 09:44 AM
பார்வைகள்: 158
பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டின் நாஸ்கா நகருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாஸ்கா கோடுகளை வானில் இருந்து பார்வையிடுவதற்காக இகா நகரிலிருந்து புறப்பட்ட செஸ்னா கிராண்ட் கேரவன் ரக விமானமே இந்த விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், விமானி மற்றும் துணை விமானி உள்ளிட்ட மொத்தம் 13 பேர் பயணித்திருந்ததாகவும், விபத்தில் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 14 ஆண்டுகளாக சுற்றுலா சேவையில் செஸ்னா கிராண்ட் கேரவன் விமானங்களை பாதுகாப்பாக இயக்கி வந்ததாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.