Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

86 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாகக் காத்த கயானா – 47 வயதில் இம்ரான் தாஹிர் தலைமையில் குளோபல் சூப்பர் லீக் சாம்பியன்

03 Aug 2026, 11:24 AM
பார்வைகள்: 1,826
86 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாகக் காத்த கயானா – 47 வயதில் இம்ரான் தாஹிர் தலைமையில் குளோபல் சூப்பர் லீக் சாம்பியன்

குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணிக்காக மேத்யூ போர்டே 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து அதிகபட்ச பங்களிப்பை வழங்கினார்.

பந்துவீச்சில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியின் பீட்டர் சிடில் மற்றும் அனிருத் இமானுவல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஃபேபியன் ஆலன், கல்லம் மற்றும் கரிமா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

86 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி, கயானாவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்காக ஓலிவர் பீக் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார்.

கயானா அணியின் வெற்றிக்கு டிவைன் பிரிட்டோரியஸ் மற்றும் மொஹம்மது நபி தலா 3 விக்கெட்டுகளையும், அணித்தலைவர் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி முக்கிய பங்காற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 47 வயதான இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.